Saturday, April 23, 2011

Thirunangaigal

முதன்முதலில் நான் திருநங்கைகள் பற்றி தெரிந்து கொண்டது, பெண்கள் போல் வேடமிட்ட வெட்கம்கெட்ட ஆண்கள் என்பது தான். ஒம்போது என்றும் அலி என்றும் என்னை விட இளையா  பிள்ளைகள் சொன்ன பொது ஏதோ புது விஷயம் என்று தான் அவ்வார்த்தைகளைக் 
கற்றுக்கொண்டேன். 
என் அம்மாவின் வளர்ப்பில் இப்படிப்பட்ட பேச்சுக்கள் கற்பது குறைவு. உலகம் தெரிய வேண்டும் என விகடனும், கல்கியும் கொடுத்து வளர்த்தாள் அம்மா.
அப்பொழுது தொடங்கி இன்று வரை போய்க் கொண்டிருக்கும் என் கற்றலில் நான் அறிந்ததை சிந்தித்து பார்த்தால், 
இந்த மனித சமுதாயமும், சமத்துவச் சிந்தனையும், ஜனநாயகமும் வெறும் பிதற்றல் என்று தோன்றுகிறது. என்னச் சிந்தனையாலோ, ஆதி ஷக்தி பிறப்பில் மூன்றாவது சாதியையும் படைத்தது. அனால், 
அதற்குள் மனித இனம் பொறுமை இன்றி செல்லத் துவங்கிவிட்டது. 
ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்து, ஒரு நாள் நின்று பார்த்தால், நம்முடன் பிறந்த 
மூன்றாவது பிறப்பு  ஒடிந்த கால்களோடும், கேட்கப்படாத சொற்களோடும் நமக்கினையாக வர துடித்துக் கொண்டிருக்கிறது. பூவினம், புழுவினம், தொடங்கி, நம் ஒன்று விட்ட பாட்டனாரான திருவாளர்  குரங்கார் வரை மூன்றாவது பாலினத்தை பிரிதுபார்க்காமல் இருக்க, உயர் சிந்தனையில் திளைக்கும் நம்மிடம் மட்டும் ஏன் இந்த பாகுபாடு? பிறப்பில் ஒரு தவறும் இல்லையெனும் போது, தம்மை சமூகம் ஏற்க வானவில் ஊர்வலம் போகவேண்டிய கட்டாயம் ஏன் அவர்கட்கு? மனித நாகரிகம் வளரத்தொடங்கி ஈராயிரம் ஆண்டானப்  பின்னும், கூவாகத்தில் மட்டு களித்திருந்து, பிச்சை எடுத்தும், பாலியல் தொழில் செய்தும் பிழைக்கும் நிலை ஏன் அவர்களுக்கு? ஒரு வேளை, தனிமைக்கு அஞ்சி சமூகம் அமைத்த மனித மனம், சற்றே தாம் அறிந்த இயல்பினின்று பிறழ்ந்த குற்றத்திற்காக, அவர்களுக்கு கொடுக்கும் வக்கர தண்டனையோ இது?
ஆயிரம் சமத்துவம் பேசியென்ன? வக்கர மனதில் உள்ள பேதங்கள் போகும் வரை, சோஷலிசமும், சமத்துவமும் வெறும் பேத்தல் தானே?

No comments: